நாமக்கல்: தொடர் மழையால் நாமக்கல் மாவட்டத்தில் 32 ஏரிகள் நிரம்பியுள்ளன.
நாமக்கல் மாவட்டத்தில் விவசாயம் பிரதான தொழிலாக இருந்து வருகிறது. மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகள் ஏரிகள் மூலம் பாசன வசதி பெற்று வருகிறது. குறிப்பாக நாமக்கல் கிழக்கு மாவட்ட பகுதிகளான நாமக்கல், ராசிபுரம், சேந்தமங்கலம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏரி மற்றும் கிணற்றுப் பாசனத்தை ஆதாரமாக கொண்டு சாகுபடி பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த சில ஆண்டுகளாக போதிய மழை இல்லாததால், ஏரிகள் அனைத்தும் நீரின்றி வானம் பார்த்த பூமியாக மாறியது. இதனால், விவசாயப் பணிகள் பாதிக்கப்பட்டன. இந்நிலையில், கடந்த இரு மாதங்களாக மாவட்டம் முழுவதும் பரவலாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால், மாவட்டம் முழுவதும் உள்ள பெரும்பாலான ஏரிகள் அதன் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளன.
நாமக்கல் மாவட்டத்தில் பொதுப்பணித்துறையின் கட்டுப் பாட்டில் 79 ஏரிகள் உள்ளன. இவற்றில் 32 ஏரிகள் அதன் முழுக் கொள்ளவை எட்டியுள்ளன. 5 ஏரிகள் 75 சதவீதமும், 4 ஏரிகள் 50 முதல் 75 சதவீதமும், 7 ஏரிகள் 25 முதல் 50 சதவீதமும், 7 ஏரிகள் 1 முதல் 5 சதவீதம் வரை நீர் நிரம்பியுள்ளன. 24 ஏரிகள் முற்றிலும் நிரம்பாமல் வானம் பார்த்த பூமியாய் காட்சியளிக்கின்றன.
ஏரிகளில் நீர் நிரம்பியதால், விவசாயிகள் சாகுபடி பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக போதிய மழை இல்லாததால், ஏரிகள் அனைத்தும் நீரின்றி வானம் பார்த்த பூமியாக மாறியது. இதனால், விவசாயப் பணிகள் பாதிக்கப்பட்டன.