தமிழகம்

காமராஜர் பிறந்தநாள் விழா: பள்ளி மாணவர்களுக்கு சிகை திருத்தம்- 13 ஆண்டுகளாக தொடரும் சேவை

செய்திப்பிரிவு

காமராஜர் பிறந்தநாளையொட்டி, திருப்பூர் மாநகராட்சிக்கு உள்பட்ட பெரிச்சிபாளையம் அரசு நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக சிகை திருத்தம் செய்யும் பணியை செவ்வாய்க்கிழமை செய்தனர் தெய்வராஜ் மற்றும் அவரது குழுவினர்.

இதுதொடர்பாக தெய்வராஜ் கூறும்போது, அரசுப் பள்ளிகளை வளப்படுத்தி, மாணவர்களை சேர்க்க காமராஜர் பாடுபட்டார். அவர் இல்லையென்றால், தமிழகத்தின் கடந்த இரண்டு தலைமுறை பின்தங்கி தான் இருக்கும். அவரது பிறந்தநாளை கொண்டாடும் வகையில், கடந்த 13 ஆண்டுகளாக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சிகை திருத்தம் செய்யும் பணியை, உறவினர் வழி சகோதரர்களை ஒருங்கிணைத்து குழுவாக செய்கிறோம். இதில் பெண்களும் ஈடுபடுவது மற்றொரு சிறப்பு. பெரிச்சிபாளையம் அரசு நடுநிலைப் பள்ளியில் படிக்கும் 100-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு செவ்வாய்க்கிழமை காலை 9 முதல் மாலை 3 மணி வரை சிகை திருத்தம் செய்யப்பட்டது.

SCROLL FOR NEXT