டிடிவி தினகரன் | கோப்புப் படம் 
தமிழகம்

உயர்த்தப்பட்ட ஆவின் ஆரஞ்சு பால் விலையை குறைக்க வேண்டும்: டிடிவி தினகரன் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

சென்னை: உயர்த்தப்பட்ட ஆவின் ஆரஞ்சு பால் விலையைக் குறைப்பதுடன், மற்ற பால் விலையையும் உயர்த்தக்கூடாது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்: "ஆவின் ஆரஞ்சு பால் விலையை திமுக அரசு திடீரென உயர்த்தியிருப்பது கண்டனத்திற்குரியது. கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.3 சேர்த்து கொடுப்பதாகக் கூறிவிட்டு, விற்பனை விலையில் லிட்டருக்கு ரூ.12 அதிகப்படுத்தியிருக்கிறார்கள்.

மற்ற ஆவின் பால் வகைகளின் விலையையும் அடுத்தடுத்து உயர்த்த மக்கள் விரோத திமுக அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. உயர்த்தப்பட்ட ஆவின் ஆரஞ்சு பால் விலையைக் குறைப்பதுடன், மற்ற பால் விலையையும் உயர்த்தக்கூடாது என திமுக அரசை வலியுறுத்துகிறேன்." என்று தினகரன் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT