சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப் பதாவது: வங்கக்கடல் பகுதியில் இருந்து நிலப்பகுதியை நோக்கி தற்போது குளிர்ந்த காற்று வீசுவதால், தமிழகத்தில் குளிர் அதிகம் காணப்படுகிறது. அதிகாலை நேரத் தில் அதிக அளவில் பனி விழுகிறது. கடலோரப் பகுதிகளைவிட வேலூர், சேலம், தருமபுரி உள்ளிட்ட உள்மாவட்டங்களில் குளிர் இன்னும் அதிகமாக இருக்கும்.
காற்றழுத்த தாழ்வுநிலை
தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை அடுத்த 2 நாட்களில் உருவாகும். அதன் காரணமாக டிசம்பர் 2-ம் தேதி முதல் 3 நாட்கள் வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அவ்வாறு மழை பெய்யும்போதுதான் குளிர் குறையும். அதுவரை தற்போதைய நிலையே நீடிக்கும். தமிழகம், புதுச்சேரியில் இன்று வறண்ட வானிலை காணப்படும்.