தமிழகம்

கோவை கார் வெடிப்பில் உயிரிழந்த முபின் காரில் சுற்றிய வீடியோக்கள் சேகரிப்பு

செய்திப்பிரிவு

கோவை: கோவையில் கார் சிலிண்டர் வெடிப்பதற்கு முன்பு முபின் காரில் சுற்றித்திரிந்த வீடியோக்களை என்.ஐ.ஏ அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர்.

கோவை கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே கடந்த அக்டோபர் 23-ம் தேதி கார் சிலிண்டர் வெடித்த சம்பவத்தில் ஜமேஷா முபின் என்பவர் உயிரிழந்தார். இந்த வழக்கில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவம் நடப்பதற்கு முன்பு முபின் அப்பகுதில் பல முறை சுற்றித்திரிந்துள்ளார்.

இதனால் அப்பகுதியில் உள்ள கடைகள் மற்றும் வீடுகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களின் வீடியோக்களை அதிகாரிகள் சேகரிக்க தொடங்கியுள்ளனர். தவிர, இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் வங்கி கணக்குகளை ஆய்வு செய்து வருகின்றனர். உயிரிழந்த முபினின் செல்போனை போலீஸார் கைப்பற்றி உள்ள நிலையில்,

அதில் பதிவு செய்துள்ள எண்கள், அவர் அடிக்கடி பேசிய நபர்கள் உள்ளிட்ட அனைத்து தகவல்கள் குறித்தும் என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT