“பாஜகவின் கொள்கைகளை எதிர்க்கும் திமுக, அதிமுகவை வரவேற்கிறேன்” என்று தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் தங்கபாலு பேசினார்.
திருவண்ணாமலை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சுப்ரமணி யனை ஆதரித்து தி.மலை மற்றும் செங்கத்தில் வியாழக்கிழமை பிரச்சாரம் செய்த தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் தங்கபாலு பேசுகையில், “காங்கிரஸ் நினைத் திருந்தால் வேறு கட்சிகள் இருந் திருக்காது. வேறு கட்சிகளின் ஆட்சியும் இருந்திருக்காது. அனை
வருக்கும் சம உரிமை கொடுத்த காரணத்தால்தான் திமுக, அதிமுக, பாஜக ஆட்சியில் உள்ளது. ஏன்? காங்கிரஸ் இல்லை என்றால் அதிமுக என்ற கட்சியே இருந்திருக்காது. உடல்நலம் பாதிக்கப் பட்டு அமெரிக்காவில் எம்.ஜி.ஆர்.சிகிச்சை பெற்றபோது, அவர் திரும்பி வரமாட்டார் என்று பிரச்சாரம் செய்யப்பட்டது.
எம்ஜிஆர் திரும்பி வருவார், அவரை முதலமைச்சராக மக்களை பார்க்க வைப்பேன் என்று ராஜீவ்காந்தி கூறினார். அதன்படி, நாடு திரும்பினார், முதலமைச்சாரானார். அதிமுகவுக்கு உயிர் கொடுத்தது காங்கிரஸ் என்பதை அதிமுக தலைவர்கள் மறந்துவிடக் கூடாது. அதனால்தான், ஜெயலலிதாவும் முதல்வராக இருக்கிறார். தமிழகம் புறக்கணிக்கப்படுகிறது, வஞ்சிக்கப்படுகிறது என்கிறார் முதல்வர். மத்திய அரசின் நிதி இல்லை என்றால், தமிழகத்தில் எந்த திட்டமும் இருக்காது. காங்கிரஸ் டெபாசிட் இழக்க வேண்டும் என்று பேசி வரும் முதல்வர், கடந்த 2 ஆண்டுக்கு பெண்ணாகரம் தேர்தலில் அதிமுக டெபாசிட் இழந்துள்ளது. அரசியலில் எதுவும் நடக்கலாம்.
ஒவ்வொரு கட்சியும் தங்கள் கடமைகளை உணர்ந்து செயல்பட்டால் நாடு நன்றாக இருக்கும். தமிழ் மக்களின் உரிமைகளை தமிழக காங்கிரஸ் விட்டுக் கொடுத்தது கிடையாது. பாஜகவின் கொள்கைகளை திமுக, அதிமுக எதிர்ப்பதை வரவேற்கிறேன். மதசார்பற்ற ஆட்சி வர வேண்டும் என்றால் கை சின்னத்துக்கு வாக்களியுங்கள்” என்றார்.