தமிழகம்

கோவை சம்பவம் | குற்றம் செய்யாதவர்களை விடுவிக்க அனைத்து ஜமாத் கூட்டமைப்பு வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

கோவை: கோவையில் கார் சிலிண்டர் வெடித்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களில் குற்றம் செய்யாதவர்களை விடுதலை செய்ய வேண்டும் என அனைத்து ஜமாத் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக, அக்கூட்டமைப்பு சார்பில் மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணனிடம் நேற்று அளித்துள்ள மனுவில், “கோவை உக்கடம் பகுதியில் கடந்த அக்டோபர் 23-ம் தேதி நடந்த கார் சிலிண்டர் வெடித்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள இளைஞர் காரை எந்த உள் நோக்கமும் இன்றி விற்பனை செய்துள்ளார்.

மற்றொருவர் ஜமேஷா முபின் வீட்டை காலி செய்யும்போது பொருட்களை அகற்ற மட்டுமே உதவி செய்துள்ளார். இவர்களுக்கு வேறு எந்த தொடர்புகளும் இல்லை என்று தெரியவருகிறது. எனவே, அவர்களின் எதிர்காலம் கருதி விடுதலை செய்ய வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT