தமிழகம்

நாகூர் சந்தனக்கூடு விழாவுக்கு 45 கிலோ சந்தனக் கட்டைகள் முதல்வர் வழங்கினார்

செய்திப்பிரிவு

சென்னை: நாகூர் தர்கா கந்தூரி சந்தனக்கூடு விழாவுக்கு தேவையான 45 கிலோ சந்தனக் கட்டைகளை கட்டணமின்றி வழங்குவதற்கான அரசாணையை தர்கா அறங்காவலர்களிடம் முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: நாகூர் தர்காவில் ஆண்டுதோறும் நடைபெறும் கந்தூரி திருவிழாவுக்காக, தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தின் கோரிக்கையை ஏற்று, வனத்துறையில் இருப்பில் உள்ள சந்தனக் கட்டைகளை தமிழக அரசு கட்டணமின்றி வழங்கி வருகிறது. அந்த வகையில், 2023-ல்நடக்க உள்ள நாகூர் தர்கா கந்தூரி திருவிழாவுக்கு சந்தனக் கட்டைகளை கட்டணமின்றி வழங்குமாறு தமிழக அரசிடம் வக்ஃப் வாரியம் கோரிக்கை விடுத்தது. இதை பரிசீலித்த முதல்வர் ஸ்டாலின், 45 கிலோ சந்தனக் கட்டைகளை கட்டணமின்றி வழங்க உத்தரவிட்டார். இதற்கான அரசாணையை நாகூர் தர்கா தலைமை அறங்காவலர் எஸ்.சையது காமில் சாஹிப், தர்கா தலைவர் எஸ்.சையது முகமது கலீபா சாஹிப் காதிரி ஹாசிமி, அறங்காவலர் ஹாஜா நஜிமுதின் சாஹிப் ஆகியோரிடம் முதல்வர் வழங்கினார்.

SCROLL FOR NEXT