தமிழகம்

சென்னை மழை | ஒரு சுரங்கப்பாதை மட்டும் மூடல் - 7 சாலைகளில் போக்குவரத்து பாதிப்பு

செய்திப்பிரிவு

சென்னை: சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக ஒரு சுரங்கப்பாதை மட்டும் மூடப்பட்டுள்ளதாகவும், 7 சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சென்னை காவல் துறை தெரிவித்துள்ளது.

சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக ரங்கராஜபுரம் சுரங்கப்பாதை முழுவதும் மழைநீர் தேங்கியுள்ளதால், இதில் இரு சக்கர வாகனங்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தவிர்த்து அஷ்டபுஜம் ரோடு, பாந்தியன் லேன், மெட்டுக்குளம் சந்திப்பு, அசோக் நகர் 4, 7 மற்றும் 11-வது அவென்யூ, பிடி ராஜன் சாலை, இளைய தெரு, இ.எச்.ரோடு வி.என்.எம். பிரிட்ஜ் வெஸ்டர்ன் மவுத் ஆகிய சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து மெதுவாக செல்லும் நிலை உள்ளதாகவும் சென்னை பெருநகர காவல் துறை தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT