தமிழகம்

போலி பத்திரப்பதிவு தொடர்பான மனுக்களை விரைந்து ஆய்வு செய்ய அறிவுறுத்தல்

செய்திப்பிரிவு

சென்னை: போலி பத்திரப்பதிவு தொடர்பாக பெறப்பட்ட மனுக்களை விரைவாகஆய்வு செய்து, உரியவர்களிடம் சொத்தை ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பதிவுத்துறை அலுவலர்களுக்கு அமைச்சர் பி.மூர்த்தி அறிவுறுத்தியுள்ளார். சென்னை நந்தனத்தில் உள்ள ஒருங்கிணைந்த வணிகவரி மற்றும் பதிவுத்துறை அலுவலக வளாக கூட்டரங்கில், நடந்த ஆய்வுக்கூட்டத்தில் அவர் பேசியது:

முதல்வர் அறிவுறுத்தல்படி, போலி ஆவணங்களை ரத்து செய்துஅதன் உரிமையாளர்களிடம் வழங்கும் வகையில் உரிய சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, பதிவுச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுஉள்ளது. இச்சட்டத்தின்கீழ் பெறப்படும் மனுக்கள் மீதான விசாரணையை விரைவாக முடித்து, சம்பந்தப்பட்ட உரிமையாளரிடம் சொத்தை வழங்க வேண்டும். கடந்த ஏப்.1 முதல் செப்.30-ம் தேதி வரை சார்பதிவாளர் அலுவலகங்களில் பதிவு செய்யப்பட்ட பத்திரங்கள் குறித்து சென்னை, திருநெல்வேலி, கோவை மண்டலங்களுக்கு ஒரு சிறப்பு தணிக்கை குழு அமைக்கப்பட்டுள்ளது. இப்பணியில் எவ்வித தவறுகள், விடுதல்கள் நேராத வண்ணம் கவனமாக தணிக்கை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் அறிவுறுத்தினார்.

SCROLL FOR NEXT