தமிழகம்

7-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும்: விஜயகாந்த்

செய்திப்பிரிவு

7-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை தமிழக அரசு நடைமுறைத்தப்படுத்த வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு எப்போதெல்லாம் அகவிலைப்படி வழங்குகிறதோ அதே தேதியிட்டு தமிழக அரசும் தனது ஊழியர்களுக்கு அகவிலைப்படி வழங்க வேண்டும் என்ற நிரந்தர உத்தரவை எம்ஜிஆர் தனது ஆட்சி காலத்தில் பிறப்பித்துள்ளார். அது வழக்கமாகவும் நடந்து வருகிறது. இந்நிலையில் 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகள் வெளியாகி 10 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் தமிழக அரசு அதனை செயல்படுத்தவில்லை. இதர்கான காரணம் என்றும் தெரியவில்லை.

7-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டு நிலையில், இடைக்கால நிவாரணம் கூட வழங்கப்படாமல் உள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு 2% சதவிகிதம் அகவிலைப்படி 01.07.2016 அன்று முதல் வழங்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு அறிவித்துள்ள அகவிலைப்படி, தமிழக அரசு ஊழியர்களுக்கு இதுநாள் வரை வழங்கவில்லை. பொங்கல் பண்டிகைக்குள் ஏழாவது ஊதிய குழு பரிந்துரையின் படி பணப்பயனையும் 01.07.2016 முதல் அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும்'' என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT