அமைச்சர் ஐ.பெரியசாமி | கோப்புப் படம் 
தமிழகம்

மகளிர் குழுவுக்கு இனி ரூ.20 லட்சம் வரை கடனுதவி: அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்

செய்திப்பிரிவு

திண்டுக்கல்: அமைச்சர் ஐ.பெரியசாமி திண்டுக்கல்லில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ”தமிழகத்தில் சுய உதவிக் குழுக் களுக்கு இன்னும் ஒரு வாரத்தில் மீண்டும் கடன் வழங்கப்பட உள்ளது. தற்போது தள்ளுபடி செய்த கடன்களுக்குரிய தணிக்கை பணி பாதி முடிந்துவிட்டது. இன்னும் ஒரு வாரத்தில் அனைத்துப் பணிகளும் முடிவடைந்துவிடும்.

ஏற்கெனவே முதல்வர் ஸ்டாலின் சுய உதவி குழுக்களுக்கான ரூ.2 ஆயிரத்து 785 கோடி வரை கடனை தள்ளுபடி செய்துள்ளார். இந்நிலையில், மீண்டும் சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்கப்பட உள்ளது. கடந்த காலங்களில் ரூ.10 லட்சம் வரை கடன் வழங்கப்பட்டது. தற்போது ரூ.20 லட்சமாக கடன் தொகை உயர்த்தி வழங்கப்படவுள்ளது.

குடும்பத் தலைவிக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்க முதல்வர் விரைவில் அறிவிப்பு வெளியிடுவார்.” இவ்வாறு அமைச்சர் கூறினார்.

SCROLL FOR NEXT