ஜெருசலேம் புனிதப் பயணம் மேற்கொள்ள அரசு நிதியுதவி பெற சென்னையைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் விண்ணப்பிக்க லாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் ப.மகேஸ்வரி அறிவித் துள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் பெத்தலஹேம், ஜெருசலேம், நாசரேத், ஜோர்டான் நதி, கலிலியோ சமுத்திரம் மற்றும் கிறிஸ்தவ மத புனித தலங்களுக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி முதல் மார்ச் வரை பயணம் மேற் கொள்ளலாம். இதற்கு தமிழக அரசால் வழங்கப்படும் ரூ.20 ஆயிரம் நிதியுதவிக்கு விண்ணப் பிக்கலாம்.
கிறிஸ்தவ மதத்தினர் அடுத்த ஆண்டு ஜனவரி 1-ம் தேதி யன்று குறைந்தபட்சம் ஓராண்டு செல்லத்தக்க பாஸ்போர்ட் வைத் திருக்க வேண்டும். மேலும் வெளிநாட்டு பயணம் மேற் கொள்ளத்தக்க மருத்துவம் மற்றும் உடல் தகுதி பெற்றவராக இருக்க வேண்டும். ஒரு குடும்பத்தில் விண்ணப்பதாரரையும் சேர்த்து 4 பேர் பயணிக்கலாம். இப் பயணத்தில் 70 வயது நிறை வடைந்த விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். அவருக்குத் துணையாக ஒருவர் பயணம் மேற்கொள்ளவும் அனுமதிக்கப்படும்.
புனிதப் பயணம் மேற்கொள்ள விரும்பும் கிறிஸ்தவர்கள், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக 2-வது தளத்தில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்திலோ www.bcmbcmw.tn.gov.in என்ற இணைய தளம் மூலமோ விண்ணப்பப் படிவங்களைப் பெறலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் மற்றும் தேவையான அனைத்து இணைப்புகளுடன் அஞ்சல் உறையில், ‘ஜெருசலேம் புனிதப் பயணத்துக்கான விண்ணப் பம்’ என குறிப்பிட்டு, வரும் டிசம்பர் 16-ம் தேதி மாலை 5.45 மணிக்குள், மேலாண் இயக்குநர், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம், எண்.807, 5- வது தளம், அண்ணாசாலை, சென்னை-2 என்ற முகவரியில் அளிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.