தமிழகம்

வாசகர் திருவிழா மை டி.வி.யில் இன்று மறு ஒளிபரப்பு

செய்திப்பிரிவு

காஞ்சிபுரம் ‘தி இந்து' தமிழ் வாசகர் திருவிழா, மை டி.வி.யில் இன்று (நவ.21-ம் தேதி) மாலை 5 மணி முதல் 6 மணி வரை மறு ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.

காஞ்சிபுரத்தில் ‘தி இந்து' தமிழ் வாசகர் திருவிழா அண்ணா கலையரங்கில் நேற்று நடை பெற்றது. இந்த விழாவில் உ.சகாயம் ஐ.ஏ.எஸ், வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், திரைப் பட நடிகர் தம்பி ராமையா, ‘தி இந்து' தமிழ் குழுவினர் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர். இந்த விழா மை டி.வி.யில் நேற்று நேரடி ஒளிரப்பு செய்யப்பட்டது. இந்நிலையில், மை டி.வி.யில் மீண்டும் இன்று (நவ.21-ம் தேதி) மாலை 5 மணி முதல் 6 மணி வரை மறு ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.

SCROLL FOR NEXT