சென்னை: என்எல்சி, 'இந்து தமிழ் திசை' இணைந்துபள்ளி மாணவர்களுக்கான 'கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம்' விநாடி-வினா போட்டியை சென்னையில் நாளை நடத்துகின்றன. நாடு முழுவதும் இந்த ஆண்டுக்கான 'கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம்' அக்.31 முதல் நவ.6-ம் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு, என்எல்சி இந்தியா நிறுவனம் மற்றும் 'இந்து தமிழ் திசை' நாளிதழ் ஆகியவை இணைந்து 'ஊழலற்ற இந்தியாவே வளர்ந்த தேசம்' என்ற கருப்பொருளில் பள்ளி மாணவர்களுக்கான விநாடி-வினா போட்டிகளை நடத்தி வருகின்றன. ஏற்கெனவே திருச்சி, மதுரை, கோவைஆகிய மாநகரங்களில் போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன.
அதன் தொடர்ச்சியாக இப்போட்டி சென்னையில் அடையார் காந்திநகரில், கோட்டூர்புரம் ரயில் நிலையம் பின்புறம் உள்ள பெட்ரிசியன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அரங்கில் நாளை (நவ.2) நடைபெற உள்ளது. இப்போட்டியில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் முன்பதிவு செய்ய வேண்டும். போட்டி தொடங்கும் முன்பும் முன்பதிவு செய்யலாம். 5 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலை 8.30 மணிக்கும், 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பிற்பகல் 12.30 மணிக்கும் போட்டிகள் தொடங்கும். இப்போட்டி தொடர்பாக மேலும் விவரங்களைப் பெற 8838567089 என்ற எண்ணைத் தொடர்புகொள்ளலாம்.