சிறைத்துறை டிஜிபி அம்ரேஷ் பூஜாரி 
தமிழகம்

தமிழ்நாடு சிறைத் துறை டிஜிபியாக அம்ரேஷ் பூஜாரி நியமனம்

செய்திப்பிரிவு

சென்னை: தமிழ்நாடு சிறைத் துறை டிஜிபியாக அம்ரேஷ் பூஜாரியை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் 5 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி தமிழ்நாடு சிறைத் துறை டிஜிபியாக அம்ரேஷ் பூஜாரி நியமிக்கப்பட்டுள்ளார். சிபிசிஐடி ஏடிஜிபியாக அபய்குமார் சிங், சைபர் க்ரைம் ஏடிஜிபியாக சஞ்சய் குமார், ஆயுதப் படை ஐஜியாக ராதிகா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஏடிஜிபி வெங்கட்ராமனுக்கு காவல் துறை நவீனப்படுத்துதல் பிரிவு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT