தமிழகம்

மாவோயிஸ்ட்கள் சுட்டுக் கொலை: தமிழகம் முழுவதும் கண்காணிப்பு தீவிரம்

செய்திப்பிரிவு

தமிழகத்தில் மாவோயிஸ்ட்கள் பற்றிய கண்காணிப்பு தீவிரப் படுத்தப்பட்டுள்ளது.

மேற்குவங்கம், சத்தீஷ்கர் உட்பட சில மாநிலங்களில் மாவோயிஸ்ட்களின் ஆதிக்கம் உள்ளது. இவர்களை தடுக்க மத்திய அரசு மாநில போலீஸா ருடன் இணைந்து அதிரடி நடவடிக்கைகளை அவ்வப்போது மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், நீலகிரி அருகே கேரள மாநில எல்லைக்குட்பட்ட நிலம்பூர் வனப்பகுதியில் பதுங்கி இருந்த பெண் உட்பட 3 மாவோயிஸ்ட்களை கேரளா போலீஸார் சில தினங்களுக்கு முன்பு சுட்டுக் கொன்றனர். இதில், 2 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்தது. இதைத் தொடர்ந்து தமிழகத்தில் மாவோயிஸ்ட்களின் நடமாட்டம் குறித்து விசாரணை நடத்த க்யூ பிரிவு டிஐஜி ஈஸ்வர மூர்த்தி உத்தரவிட்டார். கேரளா வில் கொல்லப்பட்ட தமிழக மாவோயிஸ்ட்கள் குறித்த தகவல் களை சேகரிக்க எஸ்பி சேவியர் தன்ராஜ் தலைமையிலான தனிப்படையினர் அங்கு சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது சிலரது செல்போன் எண்கள் கிடைத்துள்ளன. அதை அடிப்படையாக வைத்து விசா ரணையை முடுக்கி விட்டுள்ளனர். அந்த எண்களின் போன் உரை யாடல்களை க்யூ பிரிவு போலீஸார் சேகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கேரளாவில் கொல்லப்பட்ட மாவோயிஸ்ட்களுடன் தொடர் புடைய சிலர் விரைவில் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக போலீஸ் தரப்பில் கூறப்படு கிறது.

SCROLL FOR NEXT