தமிழகம்

நாளிதழ் அலுவலக எரிப்பு வழக்கில் 4 பேர் மீண்டும் ஜாமீன் மனு தாக்கல்: சிபிஐ பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

செய்திப்பிரிவு

மதுரையில் ஒரு நாளிதழ் அலுவலக எரிப்பு வழக்கில் பிடிவாரண்ட்டில் கைதான 4 பேர் மீண்டும் ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுவுக்கு சிபிஐ சார்பில் பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மதுரையில் ஒரு நாளிதழ் அலு வலகத்தில் 9.5.2007-ல் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதில் 3 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கில் போலீஸாரால் கைது செய்யப்பட்ட அட்டாக் பாண்டி உட்பட 17 பேரை மதுரை சிபிஐ நீதிமன்றம் 2009-ல் விடுதலை செய்து உத்தரவிட்டது.

இதை எதிர்த்து உயர் நீதிமன்ற மதுரை கிளையில் சிபிஐ தாக்கல் செய்த மேல்முறையீட்டு விசாரணையை இழுத்தடித்ததால் அட்டாக் பாண்டியின் கூட்டாளிகள் 12 பேருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.

இவர்களில் 9 பேரை சிபிஐ கைது செய்தது. ஒருவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். தயாமுத்து, திருமுருகன் என்ற காட்டுவாசி முருகன் ஆகியோர் தலைமறைவாக உள்ளனர். கைதானவர்களில் சரவணமுத்து, முருகன் என்ற சொரிமுருகன், சுதாகர் ஆகியோ ருக்கு நிபந்தனை ஜாமீன் வழங் கப்பட்டது. ரமேஷ்பாண்டி, ராமை யாபாண்டியன், வழிவிட்டான், கந்தசாமி ஆகியோரின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, எம்.வி.முரளிதரன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. ரமேஷ்பாண்டி, ராமையாபாண்டி யன், வழிவிட்டான், கந்தசாமி ஆகி யோர் சார்பில் மீண்டும் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவுக்கு சிபிஐ சார்பில் பதில் மனுத் தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசார ணையை நவ.21-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இதனிடையே, இவ்வழக்கில் சிபிஐ சிறப்பு வழக்கறிஞர் மேல் முறையீடு செய்ததற்கு எதிராக சரவணமுத்து சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், நீதிமன்றம் நியமனம் செய்யும் சிறப்பு வழக்கறிஞர்தான் சிபிஐ சார்பில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்ய முடியும். சிபிஐ சார்பில் நியமனம் செய்யப்படும் சிறப்பு வழக்கறிஞருக்கு அந்த அதிகாரம் கிடையாது எனக் கூறப் பட்டிருந்தது. இந்த மனு மீது வரும் 21-ம் தேதி முடிவு செய்யப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT