தமிழகம்

ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் இயற்ற நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்குமாறு அதிமுக எம்.பி.க்களிடம் மனு: திருச்சியில் வீர விளையாட்டு கூட்டமைப்பினர் அளித்தனர்

செய்திப்பிரிவு

ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் இயற்ற நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்குமாறு எம்.பி.க்களிடம் வீர விளையாட்டு கூட்டமைப்பினர் மனு அளித்தனர்.

ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரி தமிழக அரசு தாக்கல் செய்திருந்த சீராய்வு மனுவை கடந்த 16-ம் தேதி உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து மிருகவதை தடுப்புச் சட்டத்தில் திருத்தம் செய்து, மீண்டும் ஜல்லிக்கட்டு நடைபெற வழிவகை செய்ய வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி மாவட்டந்தோறும் தலா ஒரு லட்சம் பேரிடம் கையெழுத்து பெறும் இயக்கம் நடைபெற்று வருகிறது.

இதுபுறமிருக்க, நடப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரில், ஜல்லிக்கட்டுக்கான அவசர சட் டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி குரல் கொடுக்குமாறு தமிழகத் தைச் சேர்ந்த மக்களவை, மாநிலங் களவை எம்.பி.க்களை ஜல்லிக் கட்டு அமைப்புகளைச் சேர்ந்த வர்கள் சந்தித்து மனு அளித்து வருகின்றனர்.

இதன்படி, திருச்சியில் நேற்று அதிமுகவைச் சேர்ந்த எம்.பி.க் கள் ப.குமார், டி.ரத்தினவேலு ஆகியோரை ஜல்லிக்கட்டு பாது காப்பு நலச் சங்கத்தின் மாநில செயலாளர் ஒண்டிராஜ், ஒருங்கி ணைப்பாளர் ராஜா, மாவட்டத் தலைவர் மூக்கன், வீர விளை யாட்டு மீட்பு கழக தலைவர் டி.ராஜேஷ் மற்றும் வீர விளை யாட்டு கூட்டமைப்பின் நிர்வாகி கள் சந்தித்து மனு அளித்தனர்.

இதேபோல் திருச்சி விமான நிலையத்தில் மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.வைத்திலி்ங் கத்தை வீர விளையாட்டு கூட்ட மைப்பினர் சந்தித்து மனு அளித் தனர்.

அனைத்து எம்பிக்களுக்கும் மனு

பின்னர் அவர்கள் கூறும் போது, “திருச்சி மட்டுமின்றி தமி ழகத்திலுள்ள அனைத்து எம்.பி.க் களையும் சந்தித்து மனு அளித்து வருகிறோம். இதுகுறித்து கட்சி யின் தலைமைக்கு தெரியப் படுத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் உறுதியளித்துள்ளனர்” என்றனர்.

SCROLL FOR NEXT