ராஜமன்னார் சாலையில் போக்குவரத்து மாற்றம் 
தமிழகம்

சென்னை | ராஜமன்னார் சாலையில் போக்குவரத்து மாற்றம்

செய்திப்பிரிவு

சென்னை: சாலை பணிகள் காரணமாக ராஜமன்னார் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை போக்குவரத்து காவல் துறை தெரிவித்துள்ளது.

கே.கே.நகரில் உள்ள ராஜமன்னார் சாலை, ஆர்.கே. சண்முகம் சாலை சந்திப்பு முதல் பி.டி.ராஜன் சாலை சந்திப்பு வரை மழை காலங்களில் மழை நீர் தேங்கி வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. இதன் காரணமாக மேற்குறிப்பிட்ட சாலையின் உயரத்தை அதிகபடுத்தம் பணி 30-ம் தேதி முதல் 1-ம் தேதி வரை 3 நாட்கள் நடைபெற் உள்ளது. இதன் காரணமாக இந்த சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது.

இதன்படி, 2-வது அவின்யூ பி.டி ராஜன் சாலையிலிருந்து வரும் வாகனங்கள் ராஜமன்னார் சாலை செல்ல பி.டி.ராஜன் சாலை, இராஜமன்னார் சாலை சந்திப்பில் இடது புறம் திரும்பி பி.டி.ராஜன் சாலை வழியாக சென்று பி.டி.ராஜன் சாலை, ராமசாமி சாலை சந்திப்பில் வலது புறம் திரும்பி ராமசாமி சாலை வழியாக சென்று ராமசாமி சாலை, ஆர்.கே.சண்முகம் சாலை சந்திப்பில் வலது புறம் திரும்பி இராஜமன்னார் சாலையை அடையலாம்.

SCROLL FOR NEXT