திருவாரூர்: கோவை கார் வெடிப்பு தொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வரும் நிலையில், முத்துப்பேட்டையில் போலீஸார் நான்கு பேர் வீடுகளில் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை, பேட்டை ரோடு பகுதியில் உள்ள அசாருதீன், சார்ஜீத், இன்டியாஸ் ஆகிய மூன்று பேர் வீடுகள் ஜமாலியர் தெருவில் உள்ள ரிஸ்வான் வீடு உட்பட நான்கு இடங்களில் போலீஸார் சோதனை நடத்தி வருகின்றனர்.
திருவாரூர் மாவட்ட எஸ்பி சுரேஷ்குமார் உத்தரவின் பேரில், முத்துப்பேட்டை டிஎஸ்பி விவேகானந்தன் தலைமையில் 30க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டு சோதனை நடைபெற்று வருகிறது. கோவையில் கார் வெடிப்பு சம்பவம் நிகழ்ந்ததை ஒட்டி என்ஐஏ விசாரணை நடைபெற்று வரும் நிலையில், என்ஐஏ அதிகாரிகளின் அறிவுறுத்தலின் பேரில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.