தஞ்சாவூர் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக மனு தாக்கல் செய்தவர் ஏ.வி.எம்.மாரிமுத்து. இவரது வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால், தஞ்சாவூர் சட்டப்பேரவைத் தொகுதி தேர்தல் பணியை நிறுத்தி வைக்கக் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதி பாரதிதாசன் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. பின்னர், மனுதாரர் தனது கோரிக்கைக்காக தேர்தல் ஆணையத்தை அணுக வேண்டும் எனக் கூறிய நீதிபதி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.