பணமதிப்பு நீக்கத்தால் மக்கள் படும் அவதியைப் போக்க நட வடிக்கை எடுக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் திமுக சார்பில் நேற்று (வியாழக்கிழமை) மனிதச் சங்கிலிப் போராட்டம் நடைபெற்றது.
500, 1000 ரூபாய் நோட்டுகளின் பணமதிப்பு நீக்கப்பட்டதை தொடர்ந்து மக்கள் படும் துயரங் களைப் போக்க நடவடிக்கை எடுக் காத மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து திமுக சார்பில் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் நேற்று மனிதச் சங்கிலிப் போராட் டம் நடைபெற்றது. சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் புரசைவாக்கம் டவுட்டன் சந்திப்பிலி ருந்து பெரம்பூர் பேரக்ஸ் சாலை, அயனாவரம், பெரம்பூர், பேப்பர் மில்ஸ் சாலை வழியாக கொளத்தூர் வரை மனிதச் சங்கிலிப் போராட்டம் நடைபெற்றது. சென்னை கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் பி.கே.சேகர்பாபு தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், எம்.எல்.ஏ.க்கள் தாயகம் கவி, ரவிச்சந்திரன், திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி பூங்குன்றன், கவிஞர் சல்மா உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். புரசைவாக்கம் டவுட்டன் சந்திப்பிலிருந்து கொளத் தூர் வரை திறந்த ஆட்டோவில் நின்றவாறு சென்று மனிதச் சங்கிலிப் போராட்டத்தை ஸ்டாலின் பார்வையிட்டார்.
சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளர் ஜெ.அன்பழகன் தலைமையில் சென்னை அண்ணா சாலை - வாலாஜா சாலை சந்திப் பிலிருந்து நந்தனம் வரை மனிதச் சங்கிலிப் போராட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
சென்னை தெற்கு மாவட்டச் செயலாளர் மா.சுப்பிரமணியன் தலைமையில் சைதாப்பேட்டையில் நடைபெற்ற மனிதச் சங்கிலிப் போராட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
மனிதச் சங்கிலிப் போராட் டத்தில் பங்கேற்ற ஸ்டாலின் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:
எவ்வித முன்னேற்பாடும் செய்யாமல் திடீரென 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இதனால் பொதுமக்கள் இதுவரை இல்லாத அளவுக்கு பெரும் துயரங்களை அனுபவித்து வருகின்றர். அரிசி, பால், காய்கறிகள், மருந்துகள் போன்ற அத்தியாவசியப் பொருட்களைக் கூட வாங்க முடியாமல் பட்ட சிரமங்கள் சொல்லி மாளாது. அறி விப்பு வெளியாகி 16 நாட்களாகியும் பெரும்பாலான ஏடிஎம்கள் இயங்க வில்லை. எனவே, மக்களின் சிரமங்களைக் குறைக்க மத்திய அரசு உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். வங்கிகளில் பணம் எடுத்தல், பணம் மாற்றுதல் ஆகியவற்றுக்கு அளிக்கப்பட்ட சலுகைகளை வரும் டிசம்பர் 31-ம் தேதி வரை நீட்டிக்க வேண்டும்.
இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.
மனிதச் சங்கிலிப் போராட்டம் காரணமாக பல்வேறு இடங்களில் மாலை 4 முதல் 5 மணிவரை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சென்னை புரசைவாக்கத்தில் நடந்த போராட்டத்தை திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து திறந்த ஆட்டோவில் சென்று கொளத்தூர் தொகுதி முழுவதும் நடந்த மனிதச் சங்கிலி போராட்டத்தை பார்வையிட்டார்.
தாம்பரத்தில்
இதேபோல் காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக சார்பில் பல்லா வரத்தில் இருந்து பெருங்களத்தூர் வரை ஜி.எஸ்.டி சாலையில் மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெற்றது. காஞ்சி வடக்கு மாவட்டச் செயலாளரும் ஆலந்தூர் சட்டப்பேரவை உறுப்பினருமான தா.மோ. அன்பரசன் தலைமையில் நடைபெற்ற மனிதச் சங்கிலியில் எம்எல்ஏக்கள் தாம்பரம் எஸ்.ஆர்.ராஜா, செங்கல்பட்டு ம. வரலட்சுமி மதுசூதனன், பல்லா வரம் இ.கருணாநிதி மற்றும் பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
அறிவிப்பு வெளியாகி 16 நாட்களாகியும் பெரும்பாலான ஏடிஎம்கள் இயங்கவில்லை. எனவே, மக்களின் சிரமங்களைக் குறைக்க மத்திய அரசு உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.