தமிழகம்

கிருபானந்த வாரியார் பேரன் காங்கிரஸில் இணைந்தார்

செய்திப்பிரிவு

கிருபானந்த வாரியாரின் பேரன் பிராவோ பி.தட்சிணாமூர்த்தி தன்னை காங்கிரஸ் கட்சியில் இணைத்துக் கொண்டார்.

இது தொடர்பாக காங்கிரஸ் ஊடகத் துறை தலைவர் ஆ.கோபண்ணா இன்று வெளியிட்ட அறிக்கையில், ''தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில நிர்வாகிகள் கே.டி.உதயம், எஸ்.ஜோசப் மணி, ஏ.மனோகரசிங் ஆகியோர் குளச்சல் சட்டப்பேரவை தொகுதி உறுப்பினர் ஜே.ஜி.பிரின்ஸ் தலைமையில் தமிழக காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர் முன்னிலையில் தங்களை காங்கிரஸ் கட்சியில் இணைத்துக் கொண்டனர்.

இதேபோல், கிருபானந்த வாரியாரின் பேரனும், திரைப்பட விநியோகஸ்தருமான பிராவோ பி.தட்சிணாமூர்த்தி பாஜகவிலிருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இன்று இணைந்தார்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT