தமிழகம்

திருப்பூரில் மேலும் 2 குவாரிகளுக்கு ரூ.7 கோடி அபராதம் விதிப்பு

செய்திப்பிரிவு

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 2 குவாரிகளுக்கு ரூ.7 கோடியே 55 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம் குண்டடம், காங்கயத்தை அடுத்த பச்சாபாளையம் பகுதியில் 2 கல்குவாரிகள், விதிமுறைகளை மீறி இயங்குவதாக கிடைத்த தகவலின் பேரில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

இந்த கல்குவாரிகள், சந்திரன், பிரகாஷ் ஆகியோருக்கு சொந்தமானது என்பதும், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியதும் தெரியவந்தது. இதையடுத்து, 2 கல் குவாரிகளுக்கும் ரூ.7 கோடியே 55 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

ஏற்கெனவே, பல்லடம் வட்டம் கோடாங்கிபாளையத்தில் சட்டவிரோதமாகவும், விதிகளை மீறியும் கிராவல் வெட்டி எடுப்பதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், கல்குவாரிக்கு ரூ.10 கோடியே 40 லட்சத்து 48 ஆயிரத்து 207 அபராதம் விதிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, விதிகளை மீறியதாக 3 குவாரிகளுக்கு ரூ.18 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT