கோப்புப் படம் 
தமிழகம்

தீபாவளி சிறப்பு பேருந்துகளில் 2.80 லட்சம் பேர் பயணம்; அரசுக்கு ரூ.9.54 கோடி வருவாய்

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை ஒட்டி இயக்கப்பட்ட சிறப்புப் பேருந்துகளில் 2.80 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். இதன் மூலம் ரூ.9.54 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

தீபாவளி பண்டிகை கடந்த 24-ம் தேதி கொண்டாப்பட்டது. இதையொட்டி, சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் வசிப்பவர்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாட அவர்களது சொந்த ஊர்களுக்குச் செல்பவர்களின் வசதிக்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 16 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. இந்தப் பேருந்துகளில் மொத்தம் 2.80 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாக போக்குவரத்துத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதன்மூலம் தமிழக அரசுக்கு ரூ.9.54 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக தமிழக போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT