தமிழகம்

வண்டலூர் | பேருந்து படியில் பயணம்: மாணவர் உயிரிழப்பு

செய்திப்பிரிவு

வண்டலூர்: வண்டலூரில் பேருந்து படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த கல்லூரி மாணவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். வண்டலூர் அருகே ஊரப்பாக்கம் மஹாவீர் நகரைச் சார்ந்த பாஸ்கர் என்பரது மகன் சஞ்சய்(18). இவர் கேளம்பாக்கத்தில் உள்ள ஹிந்துஸ்தான் கல்லூரியில் பயின்று வந்தார். நேற்று காலை தாம்பரத்திலிருந்து திருப்போரூர் செல்லும் அரசு மாநகர பேருந்தில் முன்பக்க படியில் தொங்கியபடி பயணம் மேற்கொண்டபோது, பேருந்து வண்டலூர் - கொளப்பாக்கம் சாலையில் வண்டலூர் உயிரியியல் பூங்கா பார்க்கிங் எதிரே செல்லும் போது மாணவர் தவறி கீழே விழுந்ததில் மாணவரின் மீது பேருந்தின் பின்பக்க டயர் ஏறியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக தகவலறிந்த சம்பவ இடத்துக்கு வந்த தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவினர், உடலை மீட்டு குரோம்பேட்டையில் உள்ள தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். அரசு பேருந்து ஓட்டுநர் பெருமாளிடம்(50) விசாரணை நடைபெறுகிறது.

SCROLL FOR NEXT