தமிழகம்

3 தொகுதிகளிலும் பாஜகவுக்கு எதிராக பிரச்சாரம்: விவசாயிகள் சங்கம் அறிவிப்பு

செய்திப்பிரிவு

தேசிய - தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தின் டெல்டா மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், திருச்சி யில் நேற்று மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில், “தமிழகத்தில் மழை இல்லாமல் கடும் வறட்சி நிலவு கிறது. பயிர்கள் காய்ந்து வாழ் வாதாரம் கேள்விக்குறியானதால் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர்.

தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவித்து, விவசாயம் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு நெல்லுக்கு ரூ.30 ஆயிரம், புன்செய் பயிர்களுக்கு ரூ.25 ஆயிரம், கரும்புக்கு ரூ.50 ஆயிரம், வாழைக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். காவிரி விவகாரத்தில் தொய்வு ஏற்பட்டதற்கு மத்திய பாஜக அரசும், பிரதமர் மோடியுமே கார ணம் என்று கருதுகிறோம். எனவே, அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப் பரங்குன்றம் ஆகிய தொகுதிகளில் சட்டப்பேரவைத் தேர்தலில் அக்கட்சிக்கு எதிராக தீவிர பிரச்சாரம் மேற்கொள்ளப்படும்” என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

SCROLL FOR NEXT