தமிழகம்

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் கழிப்பறை வசதிகள் ஏற்படுத்த விரைவான நடவடிக்கை தேவை: பள்ளிக் கல்வி செயலருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

செய்திப்பிரிவு

தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளி களில் கழிப்பறை வசதி மற்றும் அடிப்படை வசதிகள் ஏற்படுத்துவது தொடர்பான உறுதி யான நட வடிக்கை குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு பள்ளிக் கல்விச் செயலருக்கு உயர் நீதி மன்ற மதுரை கிளை உத்தர விட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த ஆனந்த ராஜ் என்பவர், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொது நலன் மனுவில் கூறியிருந்ததாவது: தமிழகத்தில் 15 சதவீத பள்ளிகளில் கழிப்பறை வசதி இல்லை. குறிப்பாக 1,442 பெண்கள் பள்ளிகளிலும், 4,278 ஆண்கள் பள்ளிகளிலும் கழிப்பறை வசதி இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. தமி ழகத்தில் 2,080 பள்ளிகளில் கழிப் பறை இருந்தும் பயன்படுத்த தகுதி யற்றதாக உள்ளன. பள்ளி களில் கழிப்பறை வசதிகள் ஏற்படுத்தவும், ஏற்கெனவே உள்ள கழிப்பறைகளை பராமரிக்கவும் உத்தரவிட வேண்டும் என கூறப் பட்டிருந்தது.

இந்த மனு கடந்த முறை விசா ரணைக்கு வந்தபோது, மதுரை, திண்டுக்கல், தஞ்சாவூர் மாவட்டங் களில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வழக்கறிஞர்கள் ஆணையர் களாக என்.கிருஷ்ணவேனி (மதுரை), திண்டுக்கல் (லஜபதி ராய்), என்.ஆனந்தகுமார் (தஞ்சா வூர்) ஆகியோர் தலைமையில் வழக் கறிஞர்கள் குழு நியமனம் செய்யப் பட்டது. இக்குழுவினர் 3 மாவட்டங் களில் உள்ள பள்ளிகளில் ஆய்வு செய்து உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர்.

அந்த அறிக்கையில், “பெரும் பாலான பள்ளிகளில் கழிப்பறை இல்லை. சில இடங்களில் கழிப் பறைகள் இருந்தும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன. சில கழிப்பறைகளை ஆசியர்கள் தங்களின் பயன்பாட்டுக்காக பூட்டி வைத்துக்கொள்கின்றனர். இத னால் மாணவ, மாணவிகள் திறந்த வெளியில் இயற்கை உபாதையை கழிக்கச் செல்கின்றனர்.

கழிப்பறைகளை சுத்தம் செய் வதற்கு துப்புரவு பணியாளர்கள் இல்லை. பல பள்ளிகளில் சுற்றுச் சுவர் இல்லை. காவலர்கள் இல்லாத தால் இரவு நேரங்களில் பள்ளி வளாகத்தில் சமூக விரோதிகள் நடமாட்டம் உள்ளது.

பள்ளிகளில் உள்ள நாப்கின் வழங்கும் இயந்திரம் செயல்பாட் டில் இல்லை. ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெண்டர் விடப் பட்டு மாணவிகளுக்கு இலவச நாப் கின் வழங்கப்படுகிறது. அந்த நாப் கின் சுகாதாரமாகவும், தரமானதாக வும் இல்லை. இதனால், மாணவ, மாணவிகளின் உடல் நலம் பாதிக்கப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு உயர் நீதிமன்ற முதல் அமர்வில் நேற்று விசா ரணைக்கு வந்தது. அரசு வழக்கறிஞர் வாதிடும்போது, “அரசு பள்ளிகளில் கழிப்பறை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கழிப்பறைகள் இல்லாத பள்ளிகள் இல்லை” என்றார்.

விசாரணை ஒத்திவைப்பு

நீதிபதிகள் தங்களின் உத்தரவில், “வழக்கறிஞர்கள் குழுவின் அறிக்கையை தமிழக அரசுக்கு பதிவுத்துறை அனுப்பிவைக்க வேண்டும். இந்த அறிக்கையின் அடிப்படையில் தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கழிப்பறை வசதிகளை ஏற்படுத்தவும், ஏற்கெனவே உள்ள கழிப்பறைகளை பராமரிக்க துப்புரவு பணியாளர் நியமிக்கவும் எடுக்க வேண்டிய உறுதியான நடவடிக்கை குறித்து பள்ளி கல்விச் செயலர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என தெரிவித்தனர். அடுத்த விசா ரணையை நவ.8-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

SCROLL FOR NEXT