தமிழகம்

ஜமேஷா முபின் உடலை அடக்கம் செய்ய மறுத்த ஜமாத்

செய்திப்பிரிவு

கோவை: கோவை கோட்டைமேட்டில் கடந்த23-ம் தேதி அதிகாலை நடந்த கார் வெடிப்பு சம்பவத்தில் உக்கடத்தை சேர்ந்த ஜமேஷா முபின்உயிரிழந்தார். பிரேதப் பரிசோதனைக்கு பிறகு அவரது குடும்பத்தினரிடம் நேற்று முன்தினம் மாலை உடல் ஒப்படைக்கப்பட்டது. சதிச் செயலுக்கான பின்புலத்தில் இருந்ததால், ஜமேஷா முபினின் உடலை அடக்கம் செய்ய கோவையைச் சேர்ந்த எந்த ஜமாத் நிர்வாகத்தினரும் முன்வரவில்லை. இதனால் என்ன செய்வது எனத் தெரியாமல் அவரது குடும்பத்தினரும், போலீஸாரும் தவித்தனர். பின்னர், போலீஸாரின் பேச்சுவார்த்தைக்கு பின்னர், மனிதாபிமான அடிப்படையில் மேட்டுப்பாளையம் சாலை, பூ மார்க்கெட்அருகே உள்ள திப்புசுல்தான் பள்ளிவாசல் ஜமாத் மூலம் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

SCROLL FOR NEXT