தமிழகம்

அடையாறு ஆக்கிரமிப்பாளர்கள் 21 நாட்களில் காலி செய்ய நோட்டீஸ்

செய்திப்பிரிவு

வடகிழக்கு பருவ மழையையொட்டி அடையாறு ஆற்றங்கரையோரம் ஆக்கிரமித்து வீடு கட்டியிருக்கும் 350 குடும்பங்களை காலி செய்ய நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தால் தாம்பரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. வெள்ளம் பாதித்த பகுதிகளில் அதற்கான காரணத்தை கண்ட றிந்து, நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அரசு உத்தர விட்டது. நீர் வழித் தடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டதால் தண்ணீர் வடிய வழியில்லாமல் குடியிருப்புப் பகுதிகளில் புகுந்து சேதத்தை ஏற்படுத்தியதாக ஆய்வில் தெரியவந்தது. அடையாற்றின் இரு கரைப் பகுதிகளையும் சிலர் ஆக்கிரமித்துள்ளதால் தாம்பரம், பெருங்களத்துர், முடிச்சூர், வரதராஜபுரம் உள்ளிட்ட பல இடங்களில் தண்ணீர் புகுந்து கடும் சேதத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் பெருங்களத்தூர், வரதராஜபுரம் பகுதியில் அடையாறு ஆற்றின் ஓரம் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள 350 வீடுகளை 21 நாட்களுக்குள் அகற்றுமாறு நேற்று காலை பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் ஆக்கிர மிப்பாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கினர்.

SCROLL FOR NEXT