தமிழகம்

கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா நதிநீர் திறப்பு திடீர் நிறுத்தம்

செய்திப்பிரிவு

கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா நதி நீர் திறப்பதை ஆந்திர அரசு திடீரென நிறுத்தியுள்ளது. கிருஷ்ணா கால்வாயில் ஆந்திர விவ சாயிகள் சட்டவிரோதமாக நீர் உறிஞ்சு வதைத் தடுக்கும் வகையில் தண்ணீர் திறப்பதை ஆந்திர அரசு நிறுத்தி யுள்ளதாகக் கூறப்படுகிறது.

சென்னையின் குடிநீர் தேவைக்காக தெலுங்கு கங்கை ஒப்பந்தப்படி ஒவ்வோர்ஆண்டும் 2 கட்டங்களாக 12 டிஎம்சி கிருஷ்ணா நதி நீரை கண்டலேறு அணையில் இருந்து ஆந்திர அரசு திறந்து விடுகிறது.

ஆந்திர அணைகளில் போதிய நீர் இருப்பு இல்லை எனக்கூறி, நடப்பு ஆண்டு முதல் கட்டமாக ஜூலை 1-ம் தேதி தர வேண்டிய கிருஷ்ணா நீரை திறக்காத ஆந்திர அரசு, கடந்த மாதம் 10-ம் தேதி திறந்துவிடப்பட்டது.

தொடக்கத்தில் விநாடிக்கு 200 கன அடி திறக்கப்பட்ட நீரின் அளவு, படிப்படியாக உயர்த்தப்பட்டது. நேற்று முன்தினம் காலை நிலவரப்படி விநாடிக்கு 1,500 கன அடி நீர் கண்ட லேறு அணையில் இருந்து திறக்கப் பட்டாலும், தமிழக எல்லைக்கு மிக குறைந்த அளவில்தான் நீர் வந்து கொண்டிருந்தது.

ஆந்திர பகுதிகளில், கிருஷ்ணா கால்வாயில் இருந்து, மோட்டார் மூலம் ஆந்திர விவசாயிகள் சட்ட விரோதமாக கிருஷ்ணா நதி நீரை உறிஞ்சி விவசாயத்துக்கு பயன்படுத்துவதுதான் இதற்கு கார ணம் என குற்றம்சாட்டப்படுகிறது.

இதனால், தமிழக எல்லைக்கு விநாடிக்கு 280 கன அடி மற்றும் 336 கன அடி என்ற அளவில்தான் தண்ணீர் வருகிறது. நேற்று முன் தினம் நிலவரப்படி விநாடிக்கு 85 கன அடி என்ற அளவில் குறைந்தது. இதையடுத்து, ஆந்திர விவசாயிகள் நீரை உறிஞ்சுவதைத் தடுக்கும் வகை யில், தண்ணீர் திறப்பதை நேற்று காலை 6 மணியளவில், ஆந்திர அரசு தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.

ஆந்திர பகுதிகளில் தற்போது தீவிரமாக நடந்து வரும் விவசாய பணிகள் ஓரிரு வாரங்களில் முடிவுக்கு வர வாய்ப்புள்ளது. அதன்பிறகு, மீண்டும் கிருஷ்ணா நதி நீரை ஆந்திர அரசு திறக்க வாய்ப்புள்ளதாக தமிழக பொதுப்பணித் துறை அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT