தமிழகம்

மத்திய, மாநில அரசுகளை கண்டித்து திமுக இன்று மனித சங்கிலி போராட்டம்: கொளத்தூரில் ஸ்டாலின் பங்கேற்பு

செய்திப்பிரிவு

ரூபாய் நோட்டுகள் ஒழிப்பால் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்களை போக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் திமுக சார்பில் இன்று மனிதச் சங்கிலி போராட்டம் நடத்தப்படுகிறது.

புழக்கத்தில் இருந்த 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பால் மக்கள் கடும் அவதிப்படுகின்றனர். அவர்க ளின் சிரமங்களைப் போக்க நடவடிக்கை எடுக்காத மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து நவம்பர் 24-ம் தேதி மாலை 4 முதல் 5 மணி வரை அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் மனிதச் சங்கிலி போராட்டம் நடத்தப்படும் என திமுக தலைவர் கருணாநிதி அறிவித்திருந்தார்.

அதன்படி, அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் இன்று மனிதச் சங்கிலிப் போராட் டம் நடைபெறவுள்ளது. சென்னை கொளத்தூரில் நடைபெறும் போராட்டத்தில் அத்தொகுதி யின் எம்எல்ஏவும், திமுக பொரு ளாளருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.

சென்னையில் கட்சி ரீதியான சென்னை வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு ஆகிய 4 மாவட்டங்களிலும் மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெறும் என அந்தந்த மாவட்டச் செயலாளர்கள் அறிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT