சென்னை: கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் இரா.முத்தரசன் சென்னைராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இரா.முத்தரசனுக்கு கடந்த சில நாட்களாக லேசான காய்ச்சல் மற்றும் உடல் வலி இருந்துள்ளது. மருத்துவப் பரிசோதனை செய்துகொண்டதில், அவருக்கு கரோனா தொற்று இருப்பதுஉறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, நேற்று அவர் சென்னை ராஜீவ்காந்திஅரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
மருத்துர்களிடம் கேட்டபோது, “நெஞ்சக சி.டி.ஸ்கேன் பரிசோதனையில் நுரையீரலில் சளி பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. ரெம்டெசிவிர் உள்ளிட்ட மருந்துகளுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை சீராக உள்ளது. தொற்று பாதிப்பு குறைந்தவுடன் அவர் வீடு திரும்புவார்” என்றனர்.