தமிழகம்

‘எல்லோருக்கும் ஆடு, மாடு’: பேரவையில் சுவாரஸ்யம்

செய்திப்பிரிவு

சட்டப்பேரவையில் கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் வெள்ளிக்கிழமை நடந்தது. இதில் தேமுதிக உறுப்பினர் சுபா பேசும்போது, ‘‘விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்கப்படுவதுபோல விலையில்லா ஆடு, மாடுகளையும் எல்லோருக்கும் வழங்க வேண்டும்’’ என்றார்.

கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் டி.கே.எம்.சின்னையா குறுக்கிட்டு, ‘‘மிக்சி, கிரைண்டர், மின்விசிறியை எல்லோரும் பயன்படுத்துகின்றனர். ஆனால், எல்லோரும் ஆடு, மாடு மேய்ப்பதில்லை. தேமுதிக உறுப்பினர் மேய்க்கத் தயார் என்றால், அவருக்கு மாடு வழங்க ஏற்பாடு செய்யலாம்’’ என்றார்.

சுபாவும் விடவில்லை. ‘‘மூன்று மாடுகள் வைத்திருக்கிறேன். மாடு மேய்க்கத் தெரியும். வயலில் களை எடுப்பேன். தோட்ட வேலையும் செய்வேன்’’ என்றார்.

இதைக் கேட்டதும் பேரவையில் சிரிப்பொலி எழுந்தது.

SCROLL FOR NEXT