சென்னை: பாமகவின் இளைஞர் அணித்தலைவராக இருந்த அன்புமணி,கடந்த மே மாதம் இறுதியில் கட்சியின் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார். கட்சியின் தலைவராக இருந்த ஜி.கே.மணி கவுரவத் தலைவரானார்.
இந்நிலையில், கட்சியின் இளைஞர் அணித் தலைவராக ஜி.கே.எம்.தமிழ்க்குமரன் நியமிக்கப்பட்டுள்ளார். திண்டிவனம் அருகே உள்ளதைலாபுரம் தோட்டத்தில் நேற்றுநடைபெற்ற நிகழ்ச்சியில் கட்சியின்நிறுவனர் ராமதாஸ் நியமனக் கடிதத்தை ஜி.கே.எம்.தமிழ்க்குமரனிடம் வழங்கினார்.
கட்சியின் கவுரவத் தலைவர் ஜி.கே.மணியின் மகன் ஜி.கே.எம்.தமிழ்க்குமரன் ஆவார். லைகா திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் தலைமை அதிகாரியாக ஜி.கே.எம்.தமிழ்க்குமரன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.