தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
சென்னை சென்ட்ரலில் இருந்து டிசம்பர் 2, 9 தேதிகளில் இரவு 10.30 மணிக்கு புறப்படும் சுவிதா சிறப்பு ரயில் (82631), மறுநாள் மதியம் 2.10 மணிக்கு கொல்லம் சென்றடையும். இதேபோல, கொல்லத்தில் இருந்து 4, 11-ம் தேதிகளில் மாலை 3.35 மணிக்கு புறப்படும் சுவிதா சிறப்பு ரயில் (82632), மறுநாள் காலை 7.15 மணிக்கு சென்னை சென்ட்ரலை வந்தடையும்.
சென்னை எழும்பூரில் இருந்து டிசம்பர் 2-ம் தேதி இரவு 9.05 மணிக்கு புறப்படும் சுவிதா சிறப்பு ரயில் (82601), மறுநாள் காலை 10.45 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும். இதேபோல, திருநெல்வேலியில் இருந்து வரும் 4, 11-ம் தேதிகளில் மதியம் 2.45 மணிக்கு புறப்படும் சுவிதா சிறப்பு ரயில் (82602), மறுநாள் அதிகாலை 3.45 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும். மேற்கண்ட சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று (17-ம் தேதி) தொடங்குகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.