தமிழகம்

கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசு: முதல் பரிசு பெற்றவர்கள் மாநில போட்டிக்கு தகுதி

செய்திப்பிரிவு

தமிழ் வளர்ச்சித் துறையால் சென்னை மாவட்ட அளவில் 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்பட்ட கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக ரூ.10 ஆயிரம், 2-ம் பரிசு ரூ.7 ஆயிரம், 3-ம் பரிசு ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டது.

இதுகுறித்து அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழ் வளர்ச்சித் துறையால் சென்னை மாவட்ட அளவில் 11, 12-ம் வகுப்பு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு 2016-17-ம் ஆண்டுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் எழும்பூர் மாநில மகளிர் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 4-ம் தேதி நடைபெற்றது.

இதில், கவிதைப் போட்டியில் அசோக் நகர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி 12-ம் வகுப்பு மாணவி லோ.கற்பகம் முதல் பரிசையும், பிரின்ஸ் பதின் மேல்நிலைப் பள்ளி 12-ம் வகுப்பு மாணவி தா.ஜனனி 2-ம் பரிசையும், முருக தனசுகோடி மகளிர் மேல்நிலைப் பள்ளி 12-ம் வகுப்பு மாணவி செ.மாரியம்மாள் 3-ம் பரிசையும் பெற்றனர்.

கட்டுரைப் போட்டியில் விருகம்பாக்கம் ஜெய்கோபால் கரோடியா அரசு மேல்நிலைப் பள்ளி 12-ம் வகுப்பு மாணவி நீ.இளவரசி முதல் பரிசையும், எருக்கஞ்சேரி புனித சூசையப்பர் பள்ளி 12-ம் வகுப்பு மாணவர் கி.வசந்தகுமார் 2-ம் பரிசையும், கொருக்குப்பேட்டை டேனியல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 12-ம் வகுப்பு மாணவர் வெ.சுபாஷ் 3-ம் பரிசையும் பெற்றனர்.

பேச்சுப் போட்டியில் அயன்புரம் ஊ.பு.அ. செளந்திரபாண்டியன் மேல்நிலைப் பள்ளி 12-ம் வகுப்பு மாணவர் ஆ.ஜான்பால் தினகரன் முதல் பரிசையும், சென்னை தனலட்சுமி மேல்நிலைப் பள்ளி 11-ம் வகுப்பு மாணவன் ஜ.சதாம் உசேன் 2-ம் பரிசையும், சென்னை ராமகிருஷ்ணா மிஷன் பதின்நிலை மேல்நிலைப் பள்ளி 12-ம் வகுப்பு மாணவர் இரா.கா. விசுவகண்ணன் 3-ம் பரிசையும் பெற்றனர்.

மேற்கண்ட போட்டிகளில் மாவட்ட அளவில் முதல் பரிசு பெற்ற மாணவர்கள் மாநில அளவில் நடைபெறும் போட்டியில் கலந்து கொள்வார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT