கோப்புப் படம் 
தமிழகம்

மாணவி சத்யா கொலை வழக்கு: தகவல் அளிக்க காவல் அதிகாரிகளின் தொடர்பு எண் அறிவிப்பு

செய்திப்பிரிவு

சென்னை: மாணவி சத்யா கொலை வழக்கு தொடர்பாக தகவல் அளிக்க விரும்புவர்களின் வசதிக்காக காவல் அதிகாரிகளின் தொடர்பு எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை ஆலந்தூரைச் சேர்ந்த கல்லூரி மாணவி சத்யாவை (20), அதே பகுதியைச் சேர்ந்த சதீஷ்(23) கடந்த 13 ம்தேதி பரங்கிமலை ரயில் நிலையத்தில், மின்சார ரயில் முன்பு தள்ளி கொலை செய்தார். இதையடுத்து சதீஷை கைது செய்த ரயில்வே போலீஸார், அவரை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர்.

இதற்கிடையே, இந்த வழக்கு விசாரணை சிபிசிஐடி போலீஸார் வசம் ஒப்படைக்கப்பட்டது.இதையடுத்து, சிபிசிஐடி போலீஸார் தங்களது முதற்கட்ட விசாரணையை கடந்த 15-ம் தேதி தொடங்கினர். சம்பவம் நடந்த பரங்கிமலை ரயில் நிலைய அதிகாரிகள், பாதுகாப்புப் பணியில் இருந்த ரயில்வே போலீஸாரிடம் விசாரணை மேற்கொண்டனர். மேலும், ரயில் நிலையம், அதனைச்சுற்றியுள்ள பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். ரயில் ஓட்டுநரிடமும் விசாரணை நடைபெற்றது.

இந்த சம்பவம் தொடர்பாக பொதுமக்கள் தகவல் அளிக்க விரும்பினால் துணை கண்காணிப்பாளர் செல்வக்குமார் (9498142494), காவல் ஆய்வாளர் ரம்யா (9498104698 ) ஆகியோரிடம் தகவல் தெரிவிக்கலாம் என்று சிபிசிபிடி காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் dspoc2cbcid@tn.gov.in என்ற இமெயில் முகவரியிலும் தங்களின் தகவல்களை அளிக்கலாம்.

SCROLL FOR NEXT