சென்னை: சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொசுஒழிப்பு பணிகளை மேற்கொள்ள 2,084 சிறு வட்டங்களாகப் பிரிக்கப்பட்டு 3,271பணியாளர்கள் மூலம் பணிகள் நடக்கின்றன. ஒரு வார்டுக்கு கொசுமருந்து தெளிப்பான்களுடன் 2 பேர் என 200 வார்டுகளுக்கும் 400 பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இவர்கள் ஒருகுழுவுக்கு 2 பேர் என நாளொன்றுக்கு ஒரு கிமீ தூரத்துக்கு கொசு மருந்து தெளிக்கும் பணிகளை செய்கின்றனர். மேலும், 247 கிமீ நீர்வழித்தடங்களில் கொசு மருந்து தெளிக்க 128 பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். வீடுகளில் கள ஆய்வு மேற்கொள்ள வரும் பணியாளர்களுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.