தமிழகம்

திருவள்ளூரில் அரசு வளாகங்களில் 50 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழா: மண் வளம் காக்க ஆட்சியர் வேண்டுகோள்

செய்திப்பிரிவு

ஒவ்வொரு மனிதனும் ஆண்டுக்கு, இரு மரக்கன்றுகளையாவது நட்டு, மண் வளம் காக்கவேண்டும் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் முழு வதும் பசுமையாக்கும் திட்டத்தின் கீழ், பூவிருந்தவல்லி நகராட்சி எல்லைக்கு உட்பட்ட 25.55 ச. கி.மீ., பரப்பளவு முழுவதும் ஜூலை 27 முதல், ஆகஸ்ட் 5-ம் தேதிவரை 50 ஆயிரம் மரக்கன்றுகள் நட நகராட்சி நிர்வாகம் ஏற்கெனவே திட்டமிட்டுள்ளது.

மேலும், இந்திய நெடுஞ்சாலை துறையுடன் இணைந்து சென்னை யின் நுழைவாயிலான, சென்னை- பெங்களூரு நெடுஞ்சாலையில் பூவிருந்தவல்லி நகராட்சிக்கு உட்பட்ட 4.5 கி.மீ., தூரத்துக்கு மரங்கள், பூஞ்செடிகளுடன் கூடிய பசுமை திட்டத்தையும் செயல் படுத்த நகராட்சி திட்டமிட்டுள்ளது.

அதன்படி, முதல்கட்டமாக, அரசு அலுவலக கட்டிட வளாகப் பகுதிகள், அரசு மற்றும் அரசு சாரா கல்வி நிறுவனங்கள், நகராட்சி பூங்காக்கள் உள்ளிட்டவைகளில் 50 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் திட்டம் ஞாயிற்றுக்கிழமை தொடங் கப்பட்டது.

பூவிருந்தவல்லி அரசு பார்வை யற்றோருக்கான மேல்நிலைப் பள்ளி வளாகம், வட்டார வளர்ச்சி அலுவலக வளாகம், சி.எஸ்.ஐ., சர்ச் ஆகிய பகுதிகளில் நடந்த, 50 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் திட்ட தொடக்க விழாவில், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ், திருவள்ளூர் எம்.பி., டாக்டர் வேணுகோபால், பூவிருந்தவல்லி எம்.எல்.ஏ., மணிமாறன், நகராட்சி ஆணையர் சுரேந்திர ஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

விழாவில் மரக்கன்றுகளை நட்டு, திட்டத்தினை தொடங்கி வைத்து, மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் பேசியதாவது:

நாம் வாழ்வதற்குத் தேவையான காற்றையும், மழையையும் மரங்க ளால் மட்டுமே கொடுக்க முடியும். மரங்களுக்கு மட்டுமே மழை ஈர்ப்பு சக்தி இருக்கிறது. சுற்றுச் சூழலைக் காக்க மரங்களால் மட்டுமே முடியும். மக்கள் தொகை பெருக, பெருக மரங்கள் பெருகவேண்டும். ஆனால் மக்கள் தொகை பெருகிக் கொண்டிருக்கிறது, மரங்க ளின் எண்ணிக்கையோ குறைந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு மனிதனும் குறைந்தது ஆண்டுக்கு இரு மரக்கன்றுகளை நட்டு, வளர்த்து பாதுகாத்து அதை வெட்ட மாட்டேன் என உறுதி ஏற்க வேண்டும்.

மாணவர்கள், பொது மக்கள் அனைவரும் மரம் வளர்த்தல் குறித்த விழிப் புணர்வை பெருக்கி மண்வளம் காக்க முன்வர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

SCROLL FOR NEXT