தமிழகம்

மவுலிவாக்கத்தில் உள்ள 11 மாடி கட்டிடம் நாளை இடிக்கப்படுகிறது: மக்களுக்கு பாதுகாப்பு, தங்குமிடம் ஏற்பாடு

செய்திப்பிரிவு

சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் உறுப்பினர் செயலர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சென்னை போரூர் -குன்றத்தூர் சாலையில் 11 அடுக்குகள் கொண்ட கட்டிடம் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது கண்டறியப்பட்டது. இக்கட்டிடத்தை இடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, நவம்பர் 2-ம் தேதி (நாளை) பிற்பகல் 2 மணி முதல் 4 மணிக்குள் இடிக்கப்படுகிறது. இக்கட்டிடம் நவீன தொழில்நுட்பம் மூலம் வெடிமருந்துகள் பயன் படுத்தி இடிக்கப்படுகிறது. பாது காப்பான முறையில் வெடிக்கச் செய்து, கட்டிடம் அதே இடத்தில் உள்நோக்கி விழும் வகையில் இடிக்கப்படுகிறது.

11 தளங்கள் கொண்ட கட்டிடம் இடிக்கப்படும்போது பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு பல்வேறு முன்னேற்பாடுகள் சம்பந் தப்பட்ட துறைகள் மூலம் செய்யப்பட்டுள்ளன. மக்களின் வசதிக்காக தற்காலிகமாக தங்கு வதற்கு மதனந்தபுரம் பிரதான சாலையில், அமைந்துள்ள  எஸ்.ஏ.கே. ஜெய் மாருதி மஹால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த மஹாலுக்கு செல்ல கட்டணமில்லா பேருந்து வசதியும் செய்து தரப்படும்.

இடிக்கப்படும் கட்டிடத்துக்கு அருகில் முன்னெச்சரிக்கையாக 2 தீயணைப்பு வாகனங்கள், நான்கு அவசரகால ஆம்புலன்ஸ் வாகனங் கள் தயார் நிலையில் வைக்கப்பட்டி ருக்கும். கட்டிடம் இடிக்கப்படுவது தொடர்பாக அப்பகுதி மக்கள் எவ்வித அச்சமோ, பீதியோ அடைய தேவையில்லை. கட்டிடம் இடிக்கும் பணி முடிந்ததும், பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்குச் செல்வதற் கான உரிய அறிவிப்பு வழங்கப் படும். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

61 பேர் உயிரிழப்பு

முன்னதாக, தற்போது இடிக்கப் பட உள்ள கட்டிடத்தின் அருகில், கட்டுமான நிறுவனம் இதேபோல் 11 தள கட்டிடத்தையும் கட்டியது. இக்கட்டிடம் கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் 28-ம் தேதி கனமழை பெய்து கொண்டிருக்கும்போது, திடீரென இடிந்து விழுந்தது. இதில் 61 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, தற்போது இடிக்கப்பட உள்ள இக்கட்டிடத்தை ஆய்வு செய்த நிபுணர்கள், இக்கட்டிடமும் வலு விழந்த நிலையில் உள்ளதாக தெரி வித்தனர். இதையடுத்து மாவட்ட நிர்வாகம் இடிக்க உத்தர விட்டிருந்தது.

SCROLL FOR NEXT