மத்திய அரசின் இணையவழி விற்பனைமுறை (இ-மார்க்கெட்) குறித்த ஒருநாள் இலவசப் பயிற்சி சென்னை கிண்டியில் உள்ள சிறு, குறு, நடுத்தர தொழில் மேம்பாட்டு நிறுவனத்தில் இன்று (25-ம் தேதி) மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்க உள்ளது.
தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனமும், மத்திய அரசின் சிறு, குறு, நடுத்தர தொழில் மேம்பாட்டு நிறுவனமும் இணைந்து இதை நடத்துகின்றன. இதில் பங்கேற்க விரும்புவோர் மதியம் 1.30 மணிக்கு வந்து பெயரை பதிவுசெய்துகொள்ள வேண்டும். கூடுதல் விவரம் அறிய 044-22252081, 22252082 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவன இயக்குநர் ஏ.வி.முரளிதரன் அறிவித்துள்ளார்.