தமிழகம்

நடிகர் சங்க பொதுக்குழுவுக்கு பாதுகாப்பு கேட்டு மனு

செய்திப்பிரிவு

தென்னிந்திய நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் வரும் 27- ம் தேதி சென்னை லயோலா கல்லூரி யில் நடைபெற உள்ளது. இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித் துள்ளனர்.

கூட்டத்துக்கு தடை கேட்டு, நீதி மன்றத்திலும் வழக்கு தொடரப்பட் டுள்ளது. இந்நிலையில் தென்னிந் திய நடிகர் சங்க பொருளாளர் கார்த்தி, துணை தலைவர் பொன்வண்ணன் ஆகியோர் நேற்று சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்துக்கு வந்து ஒரு மனுவை கொடுத்தனர்.

பின்னர் அவர்கள் நிருபர் களிடம் கூறும்போது, “27-ம் தேதி நடைபெறவுள்ள தென் இந்திய நடிகர்கள் சங்க பொதுக் குழு கூட்டத்துக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று மனு கொடுத்து இருக் கிறோம். தகுந்த பாதுகாப்பு அளிப்பதாக போலீஸாரும் உறுதி அளித்துள்ளனர்’ என்று தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT