கள்ளக்குறிச்சி: வானூரை அடுத்த பூத்துறை ஊராட்சியில் புதுப்பிக்கப்பட்ட நூலகத்தை அரசுப் பள்ளியைச் சேர்ந்த மாணவியைக் கொண்டு திறக்கச் செய்தார் ஆட்சியர் மோகன்.
விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டத்திற் குட்பட்ட, பூத்துறை ஊராட்சியில் ரூ.6லட்சம் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட நூலகம் மற்றும் அரசு உயர் நிலைப்பள்ளியில் ரூ.5.32 லட்சம் மதிப்பீட்டில் வைப்பறையுடன் கூடிய சமைய லறை கட்டிடம், ரூ.9.57 லட்சம் மதிப்பீட்டில் மரக்கன்றுகள் நடவு செய்யும் பணி, திருச்சிற் றம்பலம் ஊராட்சியில் ரூ.5.25 லட்சம் மதிப் பீட்டில் கட்டப்பட்டுள்ள பொது கழிப்பறை திறப்பு உள்ளிட்ட நிகழ்வு விழுப்புரம் மாவட்ட நிர்வாகத்தினரால் நேற்று நடத்தப்பட்டது.
பூத்துறையில் புதுப்பிக்கப்பட்ட நூலகத்தை திறந்துவைத்த பள்ளி மாணவி.இந்த சிறிய நூலகத்தில் வாசகர்கள் அமர்ந்து வாசிக்கும் வகையில் அமைக்கப்பட்டு, புதிய நூல்கள் இடம் பெற்றுள்ளன. ரூ.6லட்சத்தில் புதுப்பிப்பு இதில், பூத்துறை ஊராட்சியில் ரூ.6லட்சம் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட நூலகத்தை பூத்துறை அரசு உயர்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவியைக் கொண்டு ஆட்சியர் மோகன் திறக்கச் செய்தார்.
வாசகர்கள் அமர்ந்து வாசிக்கும் வகையில் இந்த நூலகம் அமைக்கப்பட்டு, புதிய நூல்கள் இடம் பெற்றுள்ளன. இந்நிகழ்வில் பங்கேற்ற ஆட்சியர் கூறுகையில், “தமிழகத்தில் பொது இடங்கள், அரசுக்கு சொந்தமான காலியிடங்களில் மரக்கன்றுகள் நடவுசெய்யப் பட்டு வருகின்றன. திறந்தவெளியில் மலம் கழிப்பதை தவிர்ப்பதற்காக பல்வேறு நிலைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
அதனடிப் படையில் திருச்சிற்றம்பலம் ஊராட்சியில் ரூ.5.25 லட்சம் மதிப்பீட்டில் பொது கழிப்பிட வசதி கட்டித் தரப்பட்டுள்ளது.இதனை இப்பகுதி மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்றார். முன்னதாக மகாவீரபுரத்தில் ஒருங்கிணைந்த குழந்தை திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் அங்கன் வாடி மையத்தை ஆட்சியர் மோகன் பார்வையிட்டார்.