சென்னை: தனி நபர்கள் கொண்டு செப்டிக் டேங் மற்றும் கழிவுநீர் பாதையை சுத்தம் செய்வது சட்ட விரோதம் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் தடைச் சட்டத்தின் படி வீடுகளில் உள்ள செப்டிக் டேங்க் மற்றும் கழிவு நீர் பாதையினுள் இறங்கி சுத்தம் செய்ய எந்த ஒரு தனி நபரையும் நியமிப்பது சட்டவிரோதமானது மற்றும் தண்டனைக்குரிய குற்றம் என்று சென்னை மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த சென்னை மாநகராட்சி அறிவிப்பின் விவரம் :
* வீடுகளில் உள்ள செப்டிக் டேங் மற்றம் கழிவுநீர் பாதையை சுத்தம் செய்ய தனி நபரை நியமனம் செய்வது சட்ட விரோதமானது.
* ஒரு கட்டிடத்தில் செப்டிக் டேங்க் மற்றும் கழிவு நீர் பாதையை சுத்தம் செய்யும் போது, சுத்தம் செய்யும் நபர் மரணம் அடைந்தால் அதற்கு வீட்டு உரிமையாளர், கட்டிட உரிமையாளர், நிறுவனம் மற்றும் ஒப்பந்ததாரர் தான் பொறுப்பு
* சுத்தம் செய்யும் நபர் மரணம் அடைந்தால் வீட்டு உரிமையாளர், கட்டிட உரிமையாளர், நிறுவனம் மற்றும் ஒப்பந்ததாரர் மீது எப்ஐஆர் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
* மரணம் அடைபவரின் குடும்பத்தினருக்கு ரூ.15 லட்சம் இழப்பீடு தொகையை செலுத்த வேண்டும்.
* கழிவு நீர் பாதை மற்றும் செப்டிக் டேங்குகளை இயந்திரம் கொண்டுதான் சுத்தம் செய்ய வேண்டும்.
* இது தொடர்பாக புகார்கள் 14420 என்ற எண்ணில் பொதுமக்கள் தெரிவிக்கலாம்.