சென்னை: சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் ஸ்டாலின் நேற்று தெரிவித்ததாவது: தேர்தல் அறிக்கையில் வெளியிட்ட வாக்குறுதிகளில், 2 ஆண்டுகளில்ஆளுநர் உரையில் 77 அறிவிப்புகள், செய்தி வெளியீடு மூலம் 150, பேரவை விதி 110-ன் கீழ் 60, மாவட்ட ஆய்வுப் பயணத்தில் 77, எனது உரைகள் வழியே 46, நிதிநிலை அறிக்கையில் 255, வேளாண்நிதிநிலை அறிக்கையில் 237, அமைச்சர்களால் மானியக் கோரிக்கையில் 2,425 என மொத்தம் 3,327 அறிவிப்புகள் வெளியிடப்பட்டு, நடவடிக்கைககள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதில் 78 சதவீதம், அதாவது 2,607 அறிவிப்புகளுக்கு அரசாணைகள், அறிவுரைகள் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றில் 791 அறிவிப்புகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.