தமிழகம்

சிறுவாணியின் குறுக்கே அணை கட்ட தடை: மத்திய அரசுக்கு விஜயகாந்த் நன்றி கடிதம்

செய்திப்பிரிவு

சிறுவாணி ஆற்றின் குறுக்கே அணைக் கட்டுவதுவதற்கு கேரளத்துக்கு தடை விதித்த மத்திய அரசை பாராட்டி தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக தேமுதிக தலைமை இன்று வெளியிட்ட அறிக்கையில், ''சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரள அரசு அணை கட்ட கேரள அரசுக்கு மத்திய அரசு தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தக் கோரிக்கைக்காக மத்திய அரசை தேமுதிக தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. இதற்காக பல்வேறு போராட்டங்களை தேமுதிக நடத்தியுள்ளது. இந்நிலையில், மத்திய அரசுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக விஜயகாந்த் கடிதம் எழுதியுள்ளார்.

அதில், 'சிறுவாணியின் குறுக்கே அணை கட்டுவதற்கு மத்திய அரசு தற்காலிக தடை விதித்துள்ளது. இந்த தடையை நிரந்தர தடையாக மாற்றி, தமிழக மக்களுக்கும் விவசாயிகளுக்கும் பயனளித்திடவேண்டும். மேலும் தமிழக விவசாயிகளை காப்பாற்றும் வகையில் காவிரி மேலாண்மை வாரியம் உடனே அமைக்க வேண்டும்.

இதேபோல் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டிற்கு உள்ள தடையை நீக்கி, நடவடிக்கை எடுத்து விரைவில் தமிழர்கள் திருநாளன்று ஜல்லிக்கட்டு நடைபெறுவதற்கு தேவையான வழிமுறைகளை மத்திய அரசு ஏற்படுத்தி தர வேண்டும்' என்று விஜயகாந்த் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT