தமிழகம்

அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதி: அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனுவை நிராகரிக்க கோரி வழக்கு - செலவு கணக்கு தாக்கலாகி உள்ளதாக அதிமுக வாதம்

செய்திப்பிரிவு

அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக செலவு செய்த அரவக் குறிச்சி, தஞ்சாவூர் தொகுதி அதிமுக, திமுக வேட்பாளர்களின் வேட்புமனுக்களைத் தேர்தல் ஆணையம் ஏற்கக்கூடாது எனக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை நவம்பர் 7-ம் தேதிக்கு தள்ளி வைக்கப் பட்டது.

திருச்சி ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் டி.பி.பாலசுப்ர மணியன் சென்னை உயர் நீதி மன்றத்தில் தாக்கல் செய்த மனு வில் கூறியிருப்பதாவது:

உத்தரப் பிரதேசம் மற்றும் பீகாரில் 70 சதவீதம் பேர் குற்றப் பின்னணி உள்ளவர்கள்தான் தேர் தலில் போட்டியிடுகின்றனர்.ஆனால் தமிழகத்தில் நிலைமை அவ்வளவு மோசம் இல்லை என் றாலும் ஊழல் அரசியல்வாதிகளை வேரறுக்க வேண்டியது அவசியம். தமிழகத்தில் கடந்த சட்டப் பேர வைத் தேர்தலின்போது 232 தொகுதிகளில் தேர்தல் நடந்தது.

ஆனால் அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூர் ஆகிய தொகுதிகளில் வாக்காளர்களுக்கு அதிகளவில் பணம் கொடுத்ததால் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. தற்போது இந்த தொகுதிகளுக்கு மீண்டும் நவம்பர் 19-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்த லில் மீண்டும் கடந்த முறை போட்டியிட்டவர்களே இந்த முறையும் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர். குறிப்பாக அரவக்குறிச்சி தொகுதியில் அதிமுக வேட்பாளரான செந்தில் பாலாஜி, திமுக வேட்பாளரான கே.சி.பழனிச்சாமி ஆகிய 2 பேர்தான் அந்த தேர்தல் ரத்தா வதற்கு மூலகாரணம். இந்த 2 தொகுதிகளிலும் ஏற்கெனவே வாக் காளர்களுக்கு கொடுக்கப்பட்ட பணப்பட்டுவாடாவை தேர்தல் ஆணையமே பதிவு செய்துள்ளது.

எனவே அனுமதிக்கப்பட்ட அளவைவிட ஏற்கனவே கூடுதலாக செலவு செய்த அரவக்குறிச்சி தொகுதி அதிமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி, திமுக வேட் பாளர் கே.சி.பழனிச்சாமி, தஞ்சா வூர் தொகுதி அதிமுக வேட் பாளர் ரெங்கசாமி, திமுக வேட் பாளர் அஞ்சுகம் பூபதி ஆகி யோரின் வேட்புமனுக்களைத் தேர்தல் ஆணையம் ஏற்கக் கூடாது. அதுபோல கடந்த தேர்த லின்போது அவர்களின் செலவு கணக்கைத் தேர்தல் ஆணையம் சரி பார்க்கவேண்டும். அந்த தேர் தல் செலவு நிர்ணயிக்கப்பட்ட வரம்பிற்குள் செலவு செய்யப் பட்டதா? இல்லை, அதை விட அதிகமாக செலவு செய்யப் பட்டுள்ளதா? என்பதை தேர்தல் ஆணையம் முடிவு செய்ய வேண்டும். ஒருவேளை நிர்ணயிக் கப்பட்ட அளவைவிட கூடுதலாக செலவு செய்யப்பட்டிருந்தால் அந்த வேட்பாளர்களின் வேட்புமனுவை தேர்தல் ஆணையம் கண்டிப்பாக ஏற்கக்கூடாது. அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்ற கக்கன் போன்ற நேர்மையான, நியாயமான அரசியல்வாதிகள் வலம் வந்த தமிழகத்தில் ஊழல் பேர்வழிகளை ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது. எனவே அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூர் தொகுதி வேட்பாளர்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் சின்னமும் ஒதுக்கக் கூடாது. இவ்வாறு அதில் கோரியிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை நேற்று தலைமை நீதிபதி அடங்கிய முதல் அமர்வில் நடந்தது. அப்போது நீதிபதிகள், ‘‘தேர்தல் ரத்து செய்யப்பட்டாலும் அந்த தொகுதிகளின் தேர்தல் செலவுகள் அனுமதிக்கப்பட்ட அளவிற்குள் செய்யப்பட்டுள்ளதா? இல்லையா? என்பதை ஆய்வு செய்ய வேண்டியது தேர்தல் ஆணை யத்தின் கடமை என மனுதாரர் தரப்பு மூத்த வழக்கறிஞர் தனது வாதத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கில் தேர்தல் ஆணையத்தின் சார்பில் வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராகவில்லை. அதிமுக சார்பி லும், அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூர் தொகுதி அதிமுக வேட் பாளர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் தனது வாதத்தில் தேர்தலுக்காக தங்களது வேட் பாளர்கள் அன்றாடம் செய்த செலவுகளைப் பதிவேட்டில் ஏற்றி 4 நாட்களுக்கு ஒருமுறை தேர்தல் பார்வையாளர்களிடம் சமர்ப் பித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூர் தொகுதிகள் தொடர்பான தேர்தல் வழக்கு நிலுவையில் இருப்பதால் அந்த வழக்குடன் இதையும் சேர்த்து விசாரிப்பதற்காக வழக்கு விசாரணை வரும் நவம்பர் 7 - ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது’’ என உத்தரவிட்டனர்.

SCROLL FOR NEXT