தீபாவளி பண்டிகையை முன்னிட்டு செகந்திராபாத்-தஞ்சாவூர் இடையே தென்மத்திய ரயில்வே நிர்வாகம் 2 நாட்கள் சிறப்பு ரயில் இயக்குவதாக நேற்று முன் தினம் அறிவித்துள்ளது.
இந்த சிறப்பு ரயில், செகந்திராபாத்திலிருந்து (வண்டி எண்: 07685) அக்.22, 29-ம் தேதிகளில் (சனிக்கிழமை) இரவு 8.25 மணிக்கு புறப்பட்டு நால்கொண்ட, குண்டூர், தெனாலி, சென்னை எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம், பாபநாசம் வழியாகத் தஞ்சாவூருக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணிக்கு வந்தடைகிறது.
மறு வழித்தடத்தில் தஞ்சாவூரிலிருந்து (வண்டிஎண்:07686) அக்.24,31-ம் தேதி (திங்கட்கிழமை) காலை 7 மணிக்கு புறப்பட்டு பாபநாசம், கும்பகோணம்), மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை எழும்பூர், நெல்லூர், நால்கோடா வழியாக செகந்திராபாத் செவ்வாய்கிழமை காலை 6.30 சென்றைடையும்.
கும்பகோணம் வழியாக செகந்திராபாத்துக்கு இயங்கிய சிறப்பு ரயில் கடந்த ஆகஸ்ட் மாதம் 14-ம் தேதிக்குப் பிறகு, திடீரென ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் தற்போது பண்டிகைக்காகச் சிறப்பு ரயில் இவ்வழியே அறிவிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. இந்த சிறப்பு ரயில் ஆந்திரா, தெலங்கானா மாநில பகுதிகளில் மற்றும் சென்னையிலிருந்து மெயின் லயன் பகுதிக்குத் தீபாவளியை ஒட்டி வரும் பயணிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
மேலும், இந்த ரயிலை தொடர்ந்து இயக்க வேண்டும் என ரயில் உபயோகிப்பாளர் சங்க செயலாளர் ஏ.கிரி வலியுறுத்தியுள்ளார்.